என் மலர்
செய்திகள்

இங்கிலாந்து அணி வீராங்கனைகள்
பெண்கள் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
பெண்கள் டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 143 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஸ்கிவர் 57 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் ஜோன்ஸ் 13 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர். இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அந்த அணி 97 ரன்னில் சுருண்டது.
இதனால் இங்கிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது. ‘பி’ பிரிவில் இங்கிலாந்து நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது. இதேபிரிவில் இடம்பிடித்துள்ளத மற்றொரு அணியான தென்ஆப்பிரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Next Story