என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனை லாரா வால்வார்த்
    X
    அரைசதம் அடித்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனை லாரா வால்வார்த்

    பெண்கள் டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை 17 ரன்னில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்ஜேன் காப் 31 ரன்களும், லாரா வால்வார்த் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது.

    பின்னர் 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் ஜவேரியா கான் 31 ரன்களும், அலியா ரியாஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் அடித்த போதிலும் பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
    Next Story
    ×