search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடியை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் ஜோடி லென்டில் சிம்மன்ஸ், லீவிஸ் ஜோடி
    X
    அதிரடியை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் ஜோடி லென்டில் சிம்மன்ஸ், லீவிஸ் ஜோடி

    லென்டில் சிம்மன்ஸ் 10 சிக்சருடன் 40 பந்தில் 91 ரன்: அயர்லாந்துக்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்

    அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட்டில் லென்டில் சிம்மன்ஸ் 40 பந்தில் 10 சிக்சர்களுடன் 91 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 138 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பொல்லார்டு மற்றும் வெயின் பிராவோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    குறிப்பாக லென்டில் சிம்மன்ஸ் சிக்சர் மழை பொழிந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. 9 ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிம்மன்ஸ் 28 பந்தில் 4 பவுண்டரி, ஐந்து சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் லீவிஸ் 25 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து பூரன் களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லென்டில் சிம்மன்ஸ் 40 பந்தில் 5 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    Next Story
    ×