search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெயின் பிராவோ
    X
    வெயின் பிராவோ

    கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ‘டெத் ஓவர்’ பந்து வீச்சாளர்களில் நான் ஒருவன்: வெயின் பிராவோ

    கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த ‘டெத் ஓவர்’ பந்து வீச்சாளர்கள் பட்டியலை எடுத்தால், அதில் தன்னுடைய பெயர் இருக்கும் என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்களை வீசுவதில் ஜாம்பவானாக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைசிறந்த அணியாக திகழ அவரது பந்து வீச்சும் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த வருடம் கடைசியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    இதில் விளையாடுவதற்காக வெயின் பிராவோவை வெஸ்ட் இண்டீஸ் அழைத்தது. பொல்லார்டை கேப்டனாக நியமித்ததால் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டார்.

    காயத்தால் கடந்த சில மாதங்களாக அவர் விளையாடாமல் இருந்தார். இதனால் மீண்டும் அவரால் பழைய ஃபார்முக்கு வர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் சிறந்த ‘டெத் ஓவர்’ பந்து வீச்சாளர்கள் பட்டியலை எடுத்தால் அதில் தன் பெயரும் உண்டு என பிராவோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிராவோ கூறுகையில் ‘‘நான் சிறந்த பந்து வீச்சாளர்கள், நான் சிறந்த ஆல்-ரவுண்டர் கிரிக்கெட்டர். உண்மையிலேயே நான் வயதானவன்தான். ஆரம்பகால கட்டத்தில் நான் பந்து வீசியதுபோல் தற்போது என்னால் வேகமாக பந்து வீச முடியாது. ஆனால், நான் எப்போதுமே சிறந்தவன், இந்த வகை கிரிக்கெட்டைப் பற்றி எனக்கு போதுமான அறிவு உள்ளது.

    டெத் பவுலிங் ஒரு கலை. உலகளவில் பெரும்பாலான பந்து வீச்சாளர்கள் டெத் பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உலகளில் சிறந்த ஐந்து டெத் பந்துவீச்சாளர்கள் பட்டியலை எடுத்தீர்கள் என்றால் அதில் மலிங்கா, பும்ரா, மிட்செல் ஸ்டாரக் ஆகியோருடன் எனது பெயரும் இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×