என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து வீரர் ரோரி பேர்ன்ஸ்
    X
    இங்கிலாந்து வீரர் ரோரி பேர்ன்ஸ்

    கால்பந்து விளையாடியதால் நான்கு மாத கிரிக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்

    வார்ம்-அப்பின்போது கால்பந்து விளையாடிய போது காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி வார்ம்-அப்பில் ஈடுபட்டது உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக வீரர்கள் கால்பந்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக தொடக்க பேட்ஸ்மேன் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கேப் டவுன் டெஸ்டில் இருந்து விலகினார்.

    இந்நிலையில் காயத்திற்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது கால்பந்து விளையாடியதால் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாத முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ரோரி பேர்ன்ஸ் கவலையில் உறைந்துள்ளார்.
    Next Story
    ×