search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்ஷ் கோப்பையை கைப்பற்றிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி
    X
    மார்ஷ் கோப்பையை கைப்பற்றிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி

    மார்ஷ் கோப்பை: குயின்ஸ்லாந்து அணியை வீழ்த்தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சாம்பியன்

    மார்ஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ஷான் மார்ஷ் சதம் அடிக்க குயின்ஸ்லாந்தை வீழ்த்தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான மார்ஷ் கோப்பையின் இறுதிப் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.

    இதில் குயின்ஸ்லாந்து - வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குயின்ஸ்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.

    வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குயின்ஸ்லாந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. விக்கெட் கீப்பர் ஜிம்மி பெய்ர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 83 பந்தில் 79 ரன்க்ள சேர்க்க குயின்ஸ்லாந்து 49.3 ஓவரில் 205 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சார்ட்சன், கவுல்டர்-நைல் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் பான்கிராஃப்ட், ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முறையே 8 மற்றும் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 132 பந்தில் 101 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    Next Story
    ×