search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எமிலி ஸ்மித்
    X
    எமிலி ஸ்மித்

    ஆடும் லெவன் அணி விவரத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீராங்கனைக்கு ஓராண்டு தடை

    போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் இடம் பிடித்திருந்த 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட வீராங்கனைக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 2-ந்தேதி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் விளையாட இருந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே, ஹரிகேன்ஸ் அணியைச் சேர்ந்த எமிலி ஸ்மித் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

    இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு எதிரானது என்று ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஷ் லீக், அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் லீக்கிலும் விளையாட முடியாது.
    Next Story
    ×