search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மும்பை அணி
    X
    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மும்பை அணி

    ஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவுக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி

    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி மும்பை அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
    கோவா:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவாவின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. 

    ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் மும்பை அணியின் அமைன் செர்மிடி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
    இதையடுத்து, ஆட்டத்தின் இறுதிவரை கேரளா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், மும்பை சிட்டி எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
    Next Story
    ×