search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் தடகளம்
    X
    ஜூனியர் தடகளம்

    3,500 பேர் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் சென்னையில் நாளை தொடக்கம்

    3500 பேர் பங்கேற்கும் மாநில் ஜூனியர் தடகளம் சென்னையில் நாளை தொடங்கி செப்டம்பர் 1-ந்தேதி வரை நடக்கிறது.
    காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜே.ஒன். 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 1-ந்தேதிவரை 3 நாட்கள் இந்தப் போட்டி நடக்கிறது.

    14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறுவர், சிறுமியருக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தப் போட்டியின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் செப்டம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெறும் 31-வது தென் மண்டல ஜூனியர் போட்டி, மற்றும் திருவண்ணாமலையில் செப்டம்பர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை நடைபெறும் 17-வது பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் போட்டி ஆகியவற்றுக்கான தமிழக ஜூனியர் அணி தேர்வு செய்யப்படும்.

    மாநில ஜூனியர் தடகள போட்டிகள் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைக்கிறார்.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×