என் மலர்

  செய்திகள்

  வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்
  X

  வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயர்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்காள தேசம் கோப்பையை வென்றது.
  அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது.

  நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கீட்டதால் ஆட்டம் 24 ஓவராக குறைக்கப்பட்டது. மேலும் 23 பந்துகளை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் 21 ரன்களே அடித்தது.

  இதனால் வெஸ்ட் இண்டீஸ் 24 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்காள தேச அணிக்கு 24 ஓவரில் 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  சவுமியா சர்கார் 41 பந்தில் 66 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 22 பந்தில் 36 ரன்களும் சேர்த்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 52 ரன்கள் விளாச 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

  இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
  Next Story
  ×