search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சேஸிங், இந்தியாவின் தொடர் தோல்வி: நேற்றைய 4-வது போட்டி ஒரு அலசல்
    X

    ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சேஸிங், இந்தியாவின் தொடர் தோல்வி: நேற்றைய 4-வது போட்டி ஒரு அலசல்

    மொகாலி ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய சேஸிங் ஆகும். இந்தியாவின் மோசமான தோல்வியாகும். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்கள் குவித்தது. பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா சாதனைப் படைத்துள்ளது.

    நேற்றைய போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் பின்வருமாறு:-

    1. 2012-13-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா, சொந்த மண்ணில் தற்போது இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

    2. பேட் கம்மின்ஸ் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

    3. நேற்றைய போட்டியில் தவான் - ரோகித் சர்மா ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்தது. இதன்மூலம் அதிக சதங்கள் கண்ட ஜோடி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி 21 சதங்களும், கில்கிறிஸ்ட் - மேத்யூ ஹெய்டன் ஜோடி 16 சதங்களும் அடித்துள்ளது.

    4. 143 ரன்கள் அடித்த ஷிகர் தவான், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 137 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

    5. 3-வது விக்கெட்டுக்கு கவாஜா - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி 192 ரன்கள் குவித்தது. இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.



    6. தவான் - ரோகித் சர்மா ஜோடி 193 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    7. 359 ரன்களை சேஸிங் செய்தது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சேஸிங் ஆகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது மிகப்பெரிய சேஸிங் ஆகும்.

    8. இந்தியாவிற்கு எதிரான மிகப்பெரிய சேஸிங் ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் இதே மைதானத்தில் 2007-ல் பாகிஸ்தான் 322 ரன்களும், ஓவலில் 2017-ல் இலங்கை 322 ரன்களையும், 2005-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 316  ரன்களையும் சேஸிங் செய்துள்ளது.
    Next Story
    ×