என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஷத்மான்
    X
    அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஷத்மான்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்- முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 259/5

    டாக்காவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் நாளில் வங்காள தேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்துள்ளது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் இன்று டாக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் சாகில் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தது.

    வங்காள தேச அணியின் ஷத்மான் இஸ்லாம், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ, முகமது மிதுன் ஆகியோர் தலா 29 ரன்கள் சேர்த்தனர்.



    தொடக்க வீரர் ஷத்மான் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சாகிப் அல் ஹசன் 55 ரன்களும், மெஹ்முதுல்லா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்துள்ளது.
    Next Story
    ×