search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு- மேரிகோம்
    X

    ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு- மேரிகோம்

    டோக்கியோவில் 2020 ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே தனது இலக்கு என மேரிகோம் கூறியுள்ளார். #WorldBoxing #Championship #MaryKom
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்.

    35 வயதான அவர் சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் லைட் பிளை வெயிட் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் 7 பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று 3 குழந்தைகளுக்கு தாயான மேரிகோம் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த விழாவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றேன். ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு. டோக்கியோவில் 2020 ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்கு.

    இதற்காக நான் 2 அல்லது 3 மடங்கு கடுமையாக உழைக்க இருக்கிறேன். கடினமாக போராடி நாட்டுக்காக தங்கப்பதக்கத்தை கொண்டு வருவேன்.

    சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    எனது பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் பயிற்சியாளர் இந்திய குத்துச் சண்டை சம்மேளம், இந்திய விளையாட்டு ஆணை யத்திடம் கேட்டுள்ளேன். சிறந்த வசதிகள் அமையும் போது முடிவுகளும் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு மேரிகோம் கூறியுள்ளார். #WorldBoxing #Championship #MaryKom
    Next Story
    ×