என் மலர்

  செய்திகள்

  தியோதர் டிராபி- இந்தியா ‘சி’-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ‘பி’
  X

  தியோதர் டிராபி- இந்தியா ‘சி’-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ‘பி’

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ‘பி’ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #DeodharTrophy
  இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். நேற்று டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை இந்தியா ‘பி’ 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  இன்று இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது. பிரசாந்த் சோப்ரா, மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோப்ரா 17 ரன்னிலும், மயாங்க் அகர்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

  அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார்.

  விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா ‘பி’ 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்பானி, பப்பு ராய் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

  பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் சமர்த், ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமர்த் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

  அடுத்து ரகானே உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. ரகானே 32 ரன்களிலும், ஷுப்மான் கில் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் வெளியேறினார்.

  சூர்யகுமார் யாதவ் 39 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்னிலும் வெளியேறிய பின்னர், இந்தியா ‘ஏ’ அணி தடுமாற ஆரம்பித்தது. இஷான் கிஷன் 5 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ 48.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

  இதனால் இந்தியா ‘பி’ 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்ததால் இரண்டு வெற்றிகள் மூலம் இந்தியா ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
  Next Story
  ×