search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியோதர் டிராபி- இந்தியா ‘ஏ’ அணியை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘பி’
    X

    தியோதர் டிராபி- இந்தியா ‘ஏ’ அணியை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘பி’

    தியோதர் டிராபியில் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘பி’ அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvINDB #DeodharTrophy
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி நேற்று தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது.

    மயாங்க் அகர்வால் (46), ஷ்ரேயாஸ் அய்யர் (41), ஹனுமா விஹாரி (87 அவுட் இல்லை), மனோஜ் திவாரி (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ‘பி’ 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ களம் இறங்கியது, கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் 54 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ 46.4 ஓவரில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘பி’ அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ‘பி’ சார்பில் மார்கண்டே 4 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இந்தியா ‘ஏ’, இந்தியா ‘சி’ நாளை மோதுகின்றன. இறுதிப் போட்டி அக்டோபர் 27-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது.
    Next Story
    ×