search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து:  ஜாம்ஷெட்பூர் - கொல்கத்தா ஆட்டம் டிரா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - கொல்கத்தா ஆட்டம் டிரா

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. #ISL2018 #Jamshedpur #ATK
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

    ஜாம்ஷெட்பூர் அணியில் செர்ஜியோ சிடோன்சாவும் (35-வது நிமிடம்), கொல்கத்தா அணியில் மானுல் லான்ஜரோட்டும் (45-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த சீசனில் ‘டிரா’வில் முடிந்த 6-வது ஆட்டம் இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி, பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. 
    Next Story
    ×