என் மலர்

  செய்திகள்

  அகில இந்திய பேட்மிண்டன்- தமிழக ஜோடி சாம்பியன்
  X

  அகில இந்திய பேட்மிண்டன்- தமிழக ஜோடி சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அகில இந்திய சப்- ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இரட்டையர் பிரிவில் தமிழக ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
  அகில இந்திய சப்- ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்தது. இதன் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த என்.ஸ்ரீநிதி- ஆர்.பிரவந்திகா (காஞ்சீபுரம்) ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

  இந்த ஜோடி 21-14, 21-9 என்ற கணக்கில் ராஜஸ்தானை சேர்ந்த மனாலி சவுத்ரி- பிரக்யா கட்டாரா ஜோடியை வீழ்த்தியது.

  2-வது முறையாக தேசிய பட்டத்தை வெல்லும் ஸ்ரீநிதி தேஜஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஆதித்யா இளங்கோவிடம் பயிற்சி பெற்று வருகிறார். #tamilnews
  Next Story
  ×