search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினூ மங்கட் டிராபி- 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார் அர்ஜூன் தெண்டுல்கர்
    X

    வினூ மங்கட் டிராபி- 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார் அர்ஜூன் தெண்டுல்கர்

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான வினூ மங்கட் டிராபியில் அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். #ArjunTendulkar
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான வினூ மங்கட் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. மும்பை அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் இடம்பிடித்திருந்தார்.

    குஜராத் அணி முதலில் களம் இறங்கியது. முதல் ஓவரை அர்ஜூன் தெண்டுல்கர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குஜராத் கேப்டனை டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் பிரியேஷ் குமார் (1), எல்எம் கோசர் (8) ஆகியோரை வெளியேற்றினார்.



    குஜராத் அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறுவதற்கு அர்ஜூன் முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து விளையாடிய குஜராத் 142 ரன்னில் சுருண்டது. அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 38 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×