என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து - டெல்லி, புனே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது
Byமாலை மலர்3 Oct 2018 7:32 PM GMT (Updated: 3 Oct 2018 7:32 PM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே சிட்டி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
டெல்லி:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் சந்தித்தன.
இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியின் இறுதியில் டெல்லி அணியின் ராணா கராமி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் டெல்லி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதன் தொடர்ச்சியாக, ஆட்டத்தின் இறுதியில், புனே அணியின் டிகோ கார்லஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 1-1 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #FCPuneCity #DelhiDynamos
Next Story
×