என் மலர்
செய்திகள்

தீபிகா குமாரி
உலக வில்வித்தை போட்டி: தீபிகா குமாரிக்கு வெண்கலப்பதக்கம்
துருக்கி சாம்சன் நகரில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். #DeepikaKumari
சாம்சன்:
உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் சாம்சன் நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியின் லிசா உன்ருவை எதிர்கொண்டார். இதில் இருவரும் தலா 5 புள்ளி எடுத்து சமநிலையில் இருந்த நிலையில் ஷூட்-அவுட் சுற்றிலும் சமநிலை (9-9) நீடித்தது. இருப்பினும் இலக்கை நோக்கி அம்புகளை துல்லியமாக செலுத்திய வகையில் தீபிகா குமாரி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
ஜார்கண்டை சேர்ந்த தீபிகா குமாரி உலக போட்டியில் ருசித்த 5-வது பதக்கம் இதுவாகும். தீபிகா குமாரியை தவிர்த்து, இந்திய வீரர் அபிஷேக் வர்மாவும் இந்த போட்டியில் வெண்கலம் வென்றார். #DeepikaKumari

Next Story