என் மலர்

  செய்திகள்

  டிரென்ட் பிரிட்ஜ் வரலாற்றில் இரு அணி டாப் 5 வீரர்கள் இரட்டை இலக்க ரன்னை தொட்ட அதிசயம்
  X

  டிரென்ட் பிரிட்ஜ் வரலாற்றில் இரு அணி டாப் 5 வீரர்கள் இரட்டை இலக்க ரன்னை தொட்ட அதிசயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகள வரலாற்றில் முதன்முறையாக இரண்டு அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் டபுள் டிஜிட் ரன்னை கடந்துள்ளனர். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற நிலையில் 3-வது டெஸ்ட் கடந்த 18-ந்தேதி முதல் இன்று வரை டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  பொதுவாக டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்திற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி கண்ணை மூடிக்கொண்டு பீல்டிங் தேர்வு செய்யும். முதல் நாள் முதல் செசனில் பேட்டிங் செய்வது மிகமிக கடினம்.  ஆனால் இந்த டெஸ்டில் நடந்தது எல்லாம் தலைகீழ் இந்திய தொடக்க ஜோடி முதல் இன்னி்ங்சில் 60 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த புஜாரா இரட்டை இழக்கில் ஆட்டமிழந்தார். ரகானே, விராட் கோலி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இங்கிலாந்து வீரர்கள் முதல் இன்னிங்சில் இரட்டை இழக்க ரன்னைத் தொட்டனர்.

  இரண்டு இன்னிங்சிலும் இரு அணிகளிலும் முதல் ஐந்து வீரர்கள் இரட்டை இழக்க ரன்னை தாண்டினார்கள். டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தற்போதுதான் இரண்டு அணிகளின் முதல் ஐந்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை தாண்டியுள்ளனர்.
  Next Story
  ×