என் மலர்

  செய்திகள்

  ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா
  X

  ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பதக்கத்தை இழந்தேன் என்று பிடி உஷா தெரிவித்துள்ளார். #PTUsha
  இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்பட்டவர் பிடி உஷா. 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார். 100-ல் ஒரு பங்கு என்ற அளவில் ருமேனியா வீராங்கனை பிடி உஷாவை முந்தினார்.

  54 வயதாகும் பிடி உஷா கேரளா மாநிலத்தில் பயிற்சி மையம் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் ஈகுவடார் லைன் மெகஷின் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது லாஞ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் கைநழுவி சென்றதற்கு ஒலிம்பிக் கிராமத்தில் வழங்கப்பட்ட அரிசி கஞ்சிதான் காரணம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

  இதுகுறித்து பிடி உஷா கூறுகையில் ‘‘லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் எனக்கு வழங்கப்பட்ட உணவுகளை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அங்கு எனக்கு அரசி கஞ்சியுடன் ஊறுகாய்தான் உணவாக வழங்கப்பட்டது. அந்த ஊறுகாயை நாங்கள் கடுமாங்கா அச்சார் என்று அழைப்போம். அத்துடன் ப்ரூட் ஸ்லைஸ் வழங்கப்பட்டது. வேகவைத்த உருழைக்கிழங்கு அல்லது அரைவேக்காடு சிக்கன் அத்துடன் தரப்படும் சோயா சாஸ் மற்றும் அமெரிக்க உணவுகளை சாப்பிட்ட பழக்கம் எனக்கு கிடையாது.  லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்கா உணவு மட்டும்தான் கிடைக்கும் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. நான் வேறு எந்த உணவையும் தேர்வு செய்யவில்லை. ஆனால், எந்தவித ஊட்டச்சத்து நிறைந்த சப்போர்ட் உணவு இல்லாமல் அரசி கஞ்சி மட்டுமே தரப்பட்டது. இதனால் கடைசி 35 மீட்டரில் என்னுடைய எனர்ஜி லெவலை நிலைநிறுத்த முடியாமல் போனது. என்னுடைய பெர்மான்ஸை மிகவும் பாதித்தது.

  என்னுடைய திட்டம் முதல் 45 மீட்டரை 6.2 வினாடிக்குள் கடக்க வேண்டும் என்பது, அதை நான் சரியாக செய்தேன். ரிதம் மற்றும் வேகத்தை மெய்ன்டெய்ன் செய்வது சரியாக அமைந்தது. ஆனால் கடைசி 35 மீட்டரில் எனர்ஜியை தொடர்ந்து ஒரே லெவலாக தக்கவைக்க முடியாமல் போனது’’ என்றார்.
  Next Story
  ×