search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வி இங்கிலாந்து 2-0 என முன்னிலை
    X

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வி இங்கிலாந்து 2-0 என முன்னிலை

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்சிஸ் படுதோல்வியடைந்ததால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இந்த இன்னிங்சிலும் சொதப்பினார்கள்.

    அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.



    7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அணியின் ஸ்கோர் 117-ஆக இருந்த போது வோக்ஸ் வீசிய பந்தில் பாண்டியா 26 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் ஆண்டர்சன் தாக்குதலில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

    இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 மட்டுமே அடித்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. 

    இறுதிவரை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின் 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

    இன்ங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 4  விக்கெட்டுக்களை கைப்பற்றினர். வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND
    Next Story
    ×