search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி கால்பந்து வீரர் மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு
    X

    ஜெர்மனி கால்பந்து வீரர் மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

    ஜெர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். #MarioGomez
    பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் மரியோ கோமஸ்.

    ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணியில் மரியோ கோமஸ் இடம்பிடித்திருந்தார். இவருடன் பல முன்னணி அனுபவ வீரரகள் இடம்பிடித்திருந்தனர். உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.



    அந்த அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 33 வயதாக மரியோ கோமஸும் ஓய்வு பெற்றுள்ளார்.

    2007-ல் இருந்து ஜெர்மனி அணிக்காக விளையாடி வந்த கோமஸ் 78 போட்டிகளில் விளையாடி 31 கோல் அடித்துள்ளார். தனது ஓய்வு குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கோமஸ், ‘‘தற்போது நான் ஓய்வு முடிவை அறிவிக்கும் நேரமாகும். இது திறமையுள்ள ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களுடைய கனவை நனவாக்க வாய்ப்பாக அமையும்’’ என்றார்.
    Next Story
    ×