search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஷிங்டன் ஓபன்- விடியற்காலை 3 மணி வரை விளையாடிய ஆன்டி முர்ரே
    X

    வாஷிங்டன் ஓபன்- விடியற்காலை 3 மணி வரை விளையாடிய ஆன்டி முர்ரே

    வாஷிங்டன் டென்னிஸ் ஓபனில் ஆன்டி முர்ரே விடியற்காலை மூன்று மணி வரை விளையாடி ருமேனியா வீரரை வீழ்த்தியுள்ளார். #AndyMurray
    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ருமேனியாவின் மேரியஸ் கோபிலை எதிர்கொண்டார்.

    வலது பக்கம் இடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாதம் ஓய்வு எடுத்த பிறகு தற்போது முர்ரே களம் இறங்கினார்.

    மழைக்காரணமாக ஆட்டம் மிகவும் காலதாமதமாக தொடங்கியது. முர்ரேவிற்கு மேரியஸ் கோபில் கடும் சவாலாக விளங்கினார். இதனால் முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் முர்ரே 6 (5) - 7(7) என தோல்வியடைந்தார்.

    பின்னர் சுதாரித்துக் கொண்ட முர்ரே 2-வது சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை எளிதில் கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் மல்லுக்கட்டியதால் ஆட்டம் நீண்டுக் கொண்டே சென்றது. இறுதியில் முர்ரே 7(7) - 6(4) எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். வெற்றி பெற்ற சந்தோசத்தில் முர்ரே கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த போட்டி முடிவடைவதற்கு அதிகாலை 3 மணியாவிட்டது. இது முர்ரேவிற்கு கடும் சோர்வை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து முர்ரே கூறுகையில் ‘‘போட்டி அதிகாலை வரை நடைபெற்று, அடுத்த சுற்றுக்கு உடனடியாக தயாராவதற்கு எனது உடல்நிலை தற்போது ஒத்துழைக்கும் என்று நான் நினைக்கவில்லை.



    நான் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியில் ஆடியுள்ளேன். இதுபோன்று அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் முடிவது எந்தவொரு வீரருக்கும் சிறப்பானது அல்ல. போட்டி, வீரரகள், டிவி, ரசிகர்கள் என யாராக இருந்தாலும் அது பொருந்தும்.

    நான் உடனடியாக அடுத்த போட்டிக்கு தயாராகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×