search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸ்
    X
    பென் ஸ்டோக்ஸ்

    இங்கிலாந்துக்கு தலைவலியை ஏற்படுத்தும் மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன்கள்

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, 71 ரன்னுக்குள் ஏழு விக்கெட்டை இழந்தது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட், ஜென்னிங்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்ததும் 71 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணி தற்போதுதான் இப்படி மிடில் ஆர்டர் சொதப்பலால் ரன்குவிக்க முடியாமல் திணறவில்லை. சமீப காலமாக இந்த அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்து வருகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 184 ரன்னில் சுருண்டதது. கடைசி 6 விக்கெட்டுக்களை 35 ரன்னுக்குள் இழந்தது.

    நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 58 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஷஸ் தொடர் முழுவதும் இந்த சொதப்பல் நிகழ்ந்தது. சிட்னியில் 3 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 118 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. பெர்த்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 35 ரன்னுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.



    அடிலெய்டு டெஸ்டில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 64 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. பிரிஸ்பேனில் 4 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-4 என தோல்வியடைய மிடில் ஆர்டர் வரிசையே முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×