என் மலர்

  செய்திகள்

  இங்கிலாந்து தொடரில் என்னென்ன செய்ய வேண்டும்- ரகானேயின் பேட்டி முழு விவரம்
  X

  இங்கிலாந்து தொடரில் என்னென்ன செய்ய வேண்டும்- ரகானேயின் பேட்டி முழு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கையில், இந்திய அணியின் துணைக் கேப்டன் ரகானே அளித்த பேட்டியின் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது. #ENGvIND #Rahane
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரகானே பேட்டியளித்தார்.

  ரகானேயின் முழுப்பேட்டி பின்வருமாறு:-

  இங்கிலாந்து மண்ணில் விளையாடும்போது திறமையை விட, மனநிலைதான் மிகமிக முக்கியமானது. இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி மாறிக் கொள்வது, சூழ்நிலையை உடனடியாக கையாள்வது என்பதெல்லாம் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துதான் அமையும். ஆகவே, உங்களுடைய திறமையை பற்றி சிந்திப்பதை விட இது முக்கியமானது.

  எங்களை பொறுத்தவரையில் போட்டியின் முடிவைவிட, சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஏனென்றால், சில நேரத்தில் முடிவை நோக்கி நாம் சென்றால், அதுவே நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும். இந்த முறை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒவ்வொரு வீரர்களும் அவர்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.

  தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே இதுபோன்ற சவால்கள் மற்றும் வெளிநாட்டு தொடரை மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன். என்னுடைய மனநிலை எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு டெஸட், ஒரு போட்டி என்ற நினைப்பில்தான் களம் இறங்குவேன். இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும். ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் இருக்கும். நியூசிலாந்தில் ஸ்விங் இருக்கும். இது எல்லோருக்கும் தெரியும். இந்த தொடரை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  இங்கிலாந்தில் உள்ள சீதோசன நிலையில் கம்யூனிகேசன் மிகவும் முக்கியமானது. நீங்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது உங்களது பார்ட்னர் களத்தில் இருப்பார். அப்போது இருவரும் சிறந்த முறையில் பேசிக் கொள்ள வேண்டும்.

  யாராவது ஒரு பேட்ஸ்மேன் 70 அல்லது 80 ரன்கள் எடுத்திருக்கும்போது, சீதோசன நிலை மாறினால், அவர்கள் ரன்குவிப்பதை விட, நிலைத்து நின்று விளையாட முடிவு செய்ய வேண்டும். சூழ்நிலை மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஒரு பந்து வீச்சாளருக்கு ஒரு ஸ்பெல் சிறப்பாக அமைந்து விட்டால், அதன்பின் அந்த அணி சிறப்பான நிலையை எட்டிவிடும். பேட்டிங் யுனிட் அவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். இதை ஏற்றுக் கொள்வது முக்கியமானது.  இங்கிலாந்தில் பொறுமை என்பதுதான் முக்கியமானது. இது வெதரை சார்ந்தது. சூரியன் நன்றாக பிரகாசித்தால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால், மேகமூட்டமாக காணப்பட்டால் பந்து வீச்சாளர்கள் அசத்துவார்கள்.

  தவான் மற்றும் புஜாரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இருவரும் குவாலிட்டி வீரர்கள். ஒரு இன்னிங்சில் விளையாடி விட்டால், அவர்களது ரிதத்தை பெற்று விடுவார்கள். நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம். இறுதியாக யார் யாருக்கெல்லாம் இடம் என்பதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர்தான் முடிவு செய்வார்கள்.

  யாரெல்லாம் விளையாடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அதேபோல் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரையும் மறந்து விடக்கூடாது. அவர்கள் நமக்காக டெஸ்ட் போட்டியில் அபாரமான சாதனைகளை படைத்துள்ளனர்.  இங்கிலாந்து எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், அது பந்து வீச்சாளர்களுக்கு ஈசியாக இருக்கும் என்பது அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு பொறுமை தேவை. சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். இரண்டு முனைகளிலும் இருந்து விக்கெட் வீழ்த்த முயற்சி செய்வதை விட தங்களது சொந்த திறமை மீது உறுதியாக இருக்க வேண்டும்.

  தென்ஆப்பிரிக்கா தொடரின்போது மூன்று போட்டிகளிலும் 60 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுபோல், இந்த தொடரிலும் ஒவ்வொரு போட்டியில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடரில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்துவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

  அதேசமயத்தில் ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்திவிடக் கூடாது. அதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பந்து வீச்சு உலகின் தலைசிறந்தது என்று நம்ப வேண்டும்.  எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். முகமது ஷமி, உமேஷ் யாதவ் 2014 தொடரில் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

  எங்களது பந்து வீச்சால் எதிரணிக்கு கொடச்சல் கொடுக்க முடியும். ஆனால், பொறுமையாக, சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வது அவர்களுக்கு சவாலாக இருக்கும்.

  இவ்வாறு ரகானே கூறினார்.
  Next Story
  ×