search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளேஆப் சுற்றுக்கு நுழைவது யார்? திண்டுக்கல்-காரைக்குடி அணிகள் இன்று மோதல்
    X

    பிளேஆப் சுற்றுக்கு நுழைவது யார்? திண்டுக்கல்-காரைக்குடி அணிகள் இன்று மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய் ஆட்டத்தில் திண்டுக்கல்-காரைக்குடி அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். #TNPL2018 #NammaOoruNammagethu
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளேஆப்” சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 20 “லீக்“ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

    காரைக்குடி காளை 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகளும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளும் பெற்றுள்ளன.

    திருச்சி வாரியர்ஸ் 4 புள்ளியுடன் (2 வெற்றி, 3 தோல்வி) இருக்கிறது. காஞ்சி வீரன்ஸ் 2 புள்ளியுடனும் (1 வெற்றி, 4 தோல்வி), நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளி எதுவும் பெறாமலும் (5 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

    டி.என்.பி.எல். போட்டியின் 21-வது லீக் ஆட்டம் நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். இதனால் இரு அணிகளும் 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் உள்ளன.

    திண்டுக்கல் அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. மதுரை பாந்தர்ஸ் ( 9 விக்கெட்), கோவை கிங்ஸ் ( 8 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (7 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (4 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

    காரைக்குடி காளை அணி கோவை கிங்சை சூப்பர் ஓவரிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசை 47 ரன்னிலும், காஞ்சி வாரியர்சை 1 விக்கெட்டிலும் தோற்கடித்தது. டூட்டி பேட்ரியாட்சிடம் 11 ரன்னில் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    Next Story
    ×