search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேயிற்கு எதிராக 399 ரன்கள் குவித்து பல்வேறு உலக சாதனைகளை படைத்தது பாகிஸ்தான்
    X

    ஜிம்பாப்வேயிற்கு எதிராக 399 ரன்கள் குவித்து பல்வேறு உலக சாதனைகளை படைத்தது பாகிஸ்தான்

    ஜிம்பாப்வே அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 399 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தது பாகிஸ்தான். #PAKvZIM
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பாகிஸ்தான் இதற்கு முன்பு 385 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அது தற்போது 399 ரன்னாக உயர்ந்ததுள்ளது. ஒருநாள் போட்டியில் எந்தவொரு தொடக்க ஜோடியும் முச்சதத்தை தொட்டது கிடையாது. முதன்முறையாக பகர் சமான் - இமாம்-உல்-ஹக் ஜோடி 304 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.



    கிறிஸ் கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதன்பின் தெண்டுல்கர் - டிராவிட் 331 ரன்களும், கங்குலி - டிராவிட் 318 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இந்த ஜோடி 304 ரன்கள் குவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் இதுதான். இதற்கு முன் சோஹைல் - இன்சமாம் உல் ஹக் ஜோடி 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
    Next Story
    ×