search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி
    X

    காஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvVKV
    திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் விஷால் 34 பந்தில் 40 ரன்களும், சஞ்சய் யாதவ் 13 பந்தில் 27 ரன்களும் குவித்தனர். காரைக்குடி காளை அணி தரப்பில் லக்‌ஷ்மன் மற்றும் மோகன் பிரசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பறினர்.

    இதைத்தொடர்ந்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணியின் ஆதித்யா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆதித்யா 7 பந்துகளில் 5 ரன்களுடன் அஷ்வந்த பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



    இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மான் பாஃப்னா 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் சாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். எனினும், மறுமுனையில் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் அதிரடி ஆட்டம் ஆடவே காரைக்குடி காளை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 

    இதனால், காரைக்குடி காளை அணி 16.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

    அந்த அணியில், ஸ்ரீகாந்த் 49 பந்துகளில் 7 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 93 ரன்களும், ஸ்ரீநிவாசன் 19 பந்துகளில் 19 ரன்களும் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அஷ்வந்த் மற்றும் சுனில் சாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர். 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அனிருதா ஸ்ரீகாந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #KKvVKV
    Next Story
    ×