search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் பந்து வீச்சை தொடங்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்- இந்தியா தொடருக்கு ஆயத்தம்
    X

    மீண்டும் பந்து வீச்சை தொடங்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்- இந்தியா தொடருக்கு ஆயத்தம்

    தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான முறையில் பந்து வீச்சை தொடங்கியுள்ளார். #ENGvIND #Anderson
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 35 வயதாகும் இவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

    ஓய்விற்குப்பின் நேற்று மீண்டும் களம் இறங்கினார். நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஒருவேளை ஆண்டர்சன் பந்து வீச்சில் திருப்தியில்லை என்றால் அடுத்த வாரம் யார்க்‌ஷைர் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்புள்ளது.



    அதேபோல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் 22-ந்தேதி தொடங்கும் போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×