search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆரோன் பின்ச்
    X

    டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆரோன் பின்ச்

    டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார்.
    துபாய் :

    டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார்.

    சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் முடிவில் 891 புள்ளிகள் பெற்றிருந்தார். இதற்கிடையே ஆரோன் பின்ச், ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடி வருகிறார்.

    இந்த முத்தரப்பு தொடரில், கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசி அசத்தினார். மேலும், இந்த தொடரில் 68,172,16,3,47 என 306 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

    இதன் காரணமாக, இன்று வெளியான ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் இருந்த பின்ச் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் வீரர், பக்ரர் ஜமான் 842 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார், மூன்றாம் இடத்தில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் உள்ளார்.

    டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 12-ம் இடத்திலும், ரோகித் சர்மா 11-ம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×