என் மலர்

  செய்திகள்

  மான்செஸ்டரில் இருந்து வேறுபட்ட கார்டிஃப் சூழ்நிலை வெற்றிக்கு உதவியது- மோர்கன்
  X

  மான்செஸ்டரில் இருந்து வேறுபட்ட கார்டிஃப் சூழ்நிலை வெற்றிக்கு உதவியது- மோர்கன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மான்செஸ்டரில் இருந்து வேறுபட்ட கார்டிஃப் சூழ்நிலை வெற்றிக்கு உதவியது என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND #Morgan
  இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கார்டிஃபில் நடைபெற்ற நேற்றைய 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் அள்ளினார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மான்செஸ்டரில் இருந்து மாறுபட்ட கார்டிஃப் சூழ்நிலையே நாங்கள் வெற்றி பெற காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இன்றைய (நேற்று) ஆட்டத்தில் சூழ்நிலை முற்றிலும் வேறுபாடாக இருந்தது. குல்தீப் யாதவ் மிகவும் சிறப்பான பந்து வீச்சாளர். பெரும்பாலான நேரங்களில் சிறப்பான பந்து வீச்சையே வெளிப்படுத்துவார். ஆனால், கார்டிஃப் சூழ்நிலையை விட மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு அவருக்கு அருமையாக அமைந்தது.

  கார்டிஃப் விக்கெட்டில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. குறிப்பிடத்தகுந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால், எங்களுடைய திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. நாங்கள் அவரை சிறப்பாக எதிர்கொண்டோம்’’ என்றார்.
  Next Story
  ×