search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு டி20 தொடர்- 45 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    முத்தரப்பு டி20 தொடர்- 45 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். #PAKvAUS
    ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோஹைல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    ஆனால் பகர் சமான் அதிரடியாக விளையாடி 42 பந்தில் 73 ரன்கள் குவித்தார். ஆசிப் அலி 18 பந்தில் 37 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.



    பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கடந்த போட்டியில் சதம் அடித்த ஆரோன் பிஞ்ச் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆர்கி ஷார்ட் 28 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 7 ரன்னிலும், மேக்ஸ்வெல் 10 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது.

    விக்கெட் கீப்பர் கேரி 24 பந்தில் 37 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×