என் மலர்

  செய்திகள்

  வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டம்- தமிம் இக்பால், மெஹ்முதுல்லா சதம்
  X

  வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டம்- தமிம் இக்பால், மெஹ்முதுல்லா சதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிம் இக்பால், மெஹ்முதுல்லா சதம் அடித்தனர். #WIvBAN
  வங்காள தேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் வங்காள தேசம் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

  அதன்படி வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. வங்காள தேச அணியின் தொடக்க வீரரும், அனுபவ வீரரும் ஆன தமிம் இக்பால் 125 ரன்கள் சேர்த்தார். அத்துடன் மெஹ்முதுல்லா சதம் அடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.  இருவரின் சதத்தால் வங்காள தேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84.2 ஓவரில் 403 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி சார்பில் அல்சார் ஜோசப் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
  Next Story
  ×