search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு- இம்ரான் தாஹிருக்கு ஓய்வு
    X

    இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு- இம்ரான் தாஹிருக்கு ஓய்வு

    இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இம்ரான் தாஹிருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டடுள்ளது. இளம் வீரரான ஜூனியர் டாலா அணியில் இடம்பிடித்துள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஒரெயொரு போட்டி கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.

    இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக கேஷவ் மகாராஜ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜூனியர் டாலாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.



    இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. ஜூனியர் டாலா, 4. டி காக், 5. டுமினி, 6. ஹென்ரிக்ஸ், 7. கிளாசன், 8. கேஷவ் மகாராஜ், 9. ஏய்டன் மார்கிராம், 10. டேவிட் மில்லர், 11. வியான் மல்டர், 12. லுங்கி நிகிடி, 13. பெலுக்வாயோ, 14. காகிசோ ரபாடா, 15. ஷம்சி.
    Next Story
    ×