search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லிக்கு ஆபரேசன்
    X

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லிக்கு ஆபரேசன்

    குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஹேட்லிக்கு ஆபரேசன் நடைபெற்றுள்ளது. #Hadlee
    நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ரிச்சர்ட் ஹேட்லி. 66 வயதாகும் இவர் கடந்த 1990-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 86 டெஸ்டில் விளையாடி 431 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். முதன்முறையாக டெஸ்டில் 400 விக்கெட்டுக்களை கடந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர்.



    இவருக்கு கடந்த மாதம் குடலில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஹேட்லி முழுவதுமாக குணமடைந்து விடுவார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×