search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன்- செரீனாவிற்கு தொடருக்கான தரவரிசை இல்லை
    X

    பிரெஞ்ச் ஓபன்- செரீனாவிற்கு தொடருக்கான தரவரிசை இல்லை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸிற்கு தரவரிசை கொடுக்கப்படாது எனத் தெரியவந்துள்ளது. #FrenchOpen
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்ற செரீனா வில்லியம்ஸ் கர்ப்பம் காரணமாக அதன்பின் விளையாடவில்லை. சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் களத்திற்கு திரும்பினார்.

    முதல் தொடரான இந்தியன் வெல்ஸ், மியாமி ஆகிய தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை. தற்போது நடைபெற்ற மாட்ரிட் மற்றும் இத்தாலி ஓபனில் இருந்து விலகினார். இந்நிலையில் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வேன் என்று செரீனா தெரிவித்துள்ளார்.

    ஆனால், இந்த தொடருக்கான தரவரிசை கொடுக்கப்பட மாட்டாது என்று போட்டி ஒருகிணைப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பார்கள் கூறுகையில் ‘‘உலக டென்னிஸ் சங்கத்தின் தரவரிசை அடிப்படையில்தான் பிரெஞ்சு ஓபன் தரவரிசை தயார் செய்யப்படும். இந்த வாரத்தின் தரவரிசையும் இதற்குள் அடங்கும்’’ என்றனர்.



    தற்போது செரீனா வில்லியம்ஸ் 453-வது ரேங்கில் உள்ளார். உலகத் தரவரிசையில் சிறப்பு ரேங்க் விதிமுறையின் கீழ், நீண்ட காலமாக விடுப்பில் இருந்து திரும்பும் வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா வில்லியம்ஸ் மூன்று முறை பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார்.
    Next Story
    ×