என் மலர்

  செய்திகள்

  கவுன்டி கிரிக்கெட்டில் ஜொலிக்காத புஜாரா- 5 இன்னிங்சில் 42 ரன்களே எடுத்துள்ளார்
  X

  கவுன்டி கிரிக்கெட்டில் ஜொலிக்காத புஜாரா- 5 இன்னிங்சில் 42 ரன்களே எடுத்துள்ளார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுன்டி கிரிக்கெட்டில் யார்க்‌ஷைர் அணிக்காக விளையாடி வரும் புஜாரா ஐந்து இன்னிங்சில் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். #Pujara #YORKSvESSEX
  இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக புஜாரா உள்ளார். இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

  இதற்கு தயாராகும் வகையில் புஜாரா கவுன்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார். அவரை யார்க்‌ஷைர் அணி ஒப்பந்தம் செய்தது. கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன் 1-ல் புஜாரா விளையாடி வருகிறார். இந்த சீசனில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. யார்க்‌ஷைர் அணி நாட்டிங்காம்ஷைரை கடந்த மாதம் 20-ந்தேதி எதிர்கொண்டது. இதில் யார்க்‌ஷைர் வெற்றி பெற்றாலும் புஜாரா முதல் இன்னிங்சில் 2 ரன்னும், 2-வது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார்.  சோமர்செட் அணிக்கு எதிராக ஏப்ரல் 27-ந்தேதி தொடங்கிய ஆட்டத்தில் 7 ரன்னும், 6 ரன்களும் எடுத்தார். இன்று தொடங்கிய ஆட்டத்தில் எசக்ஸ் அணிக்கெதிராக 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். யார்க்‌ஷைர் அணி எசக்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 50 ரன்னில் சுருண்டது.

  ஐந்து இன்னிங்சில் 42 ரன்கள் மட்டுமே எடுத்து புஜாரா ஏமாற்றம் அளித்துள்ளார். இந்திய அணி கேப்டனான விராட் கோலியை சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த மாதம் விராட் கோலி கவுன்டி போட்டியில் விளையாட உள்ளார்.
  Next Story
  ×