search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்மிண்டன் தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்து பிரனோய் அசத்தல்
    X

    பேட்மிண்டன் தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்து பிரனோய் அசத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான பிரனோய் முதன்முறையாக உலகத் தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்துள்ளார். #HSPrannoy #BWFworldrankings
    பேட்மிண்டன் இந்தியாவின் எச்எஸ் பிரனோய் சிறப்பாக விளையாடி வருகிறார். தனது சிறப்பான ஆட்டத்தால் உலகத் தரவரிசைப் பட்டியலில் சில முறை 10-வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் 10-க்கு கீழ் வந்ததில்லை.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதன்முறையாக உலகத் தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1965-ல் தினேஷ் கண்ணா தங்கப்பதக்கமும், அனுப் ஸ்ரீதர் 2007-ல் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். தற்போது 3-வது நபராக பிரனோய் பதக்கம் வென்றுள்ளார்.
    Next Story
    ×