என் மலர்

  செய்திகள்

  உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் துப்பாக்கி சுடுதல் வீரர் ஷாஜர் ரிஸ்வி
  X

  உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் துப்பாக்கி சுடுதல் வீரர் ஷாஜர் ரிஸ்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஷாஜர் ரிஸ்வின் முதல் இடம் பிடித்துள்ளார். #ISSF #ShahzarRizvi
  இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடுதல் வீரர் ஷாஜர் ரிஸ்வி. இவர் தென்கொரியாவில் உள்ள சாங்வோனில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 1654 புள்ளிகள் பெற்று உலகத் தரவரிசையில் முதல் இடம்பிடித்துள்ளார்.

  ரிஸ்வி கடந்த மார்ச் மாதம் மெக்சிகோவின் குவாடலாஜாராவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ரஷியாவின் ஆர்ட்டெம் சேர்னௌசோவ் 1046 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஜப்பான் வீரர் டொமோயுகி மட்சுடா 803 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜித்து ராய் 6-வது இடத்திலும், ஓம் பிரகாஷ் மிதர்வால் 12-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பாகர் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

  10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ரவிகுமார் 4-வது இடத்திலும், தீபக் குமார் 9-வது இடத்திலும் உள்ளனர். 50 மீட்டர் ரைபில் 3 பொஷிசன்ஸ் பிரிவில் அகில் ஷெயோரன் நான்காவது இடத்திலும், சஞ்ஜீவ் ராஜ்புட் 8-வது இடத்திலும் உள்ளனர்.
  Next Story
  ×