search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2022 கத்தார் உலகக் கோப்பையில் கூடுதல் அணிகள்- ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு
    X

    2022 கத்தார் உலகக் கோப்பையில் கூடுதல் அணிகள்- ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு

    கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபா திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    ரஷியாவில் வருகிற ஜூன் மாதம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2022-ல் கத்தாரில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக கத்தார் பிரமாண்ட ஸ்டேடியங்களை கட்டி வருகிறது.

    2018 உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 2022-ல் 32 அணியை 48 அணியாக உயர்த்த பிஃபா திட்டமிட்டுள்ளது. 16 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டால் 16 போட்டிகளில் அதிகமாகவும், நான்கு நாட்கள் கூடுதலாகவும் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டும்.

    கத்தாரில் கடும் வெயில் இருக்கும் என்பதால் போட்டி நவம்பர் மாதம் 21-ந்தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 18-ந்தேதி போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது நான்கு நாட்கள் அதிகரிக்கப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

    ஐரோப்பிய நாடுகளின் லீக் ஆட்டம் பாதிநிலையை எட்டியிருக்கும் நிலையில், உலகக்கோப்பையால் லீக் தொடர்களை தள்ளி போட முடியாது என ஐரோப்பிய லீக் குரூப் தெரிவித்துள்ளன. இதனால் கத்தார் உலகக்கோப்பையில் 48 அணிக்ள பங்கேற்குமா? என்பது சந்தேகம்தான்.
    Next Story
    ×