என் மலர்

  செய்திகள்

  சாஹலுக்கு பதிலாக அக்சரை சேர்க்க வேண்டும்: கவாஸ்கர்
  X

  சாஹலுக்கு பதிலாக அக்சரை சேர்க்க வேண்டும்: கவாஸ்கர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் சாஹலுக்கு பதிலாக அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இன்றைய 3-வது 20 ஓவர் போட்டி குறித்து கூறியதாவது:-

  தென் ஆப்பிரிக்காவின் இந்திய பயணம் முடியும் தருவாயில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அதனால் அந்த அணி வெற்றி பெற்றது.

  ஒரு நாள் தொடரில் யசுவேந்திர சாஹலின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. ஆனால் 20 ஓவர் போட்டியில் கொஞ்சம் தடுமாறுகிறார். ஜோகன்ஸ்பர்க் ஆடுகளத்தில் இருந்து செஞ்சூரியன் ‘பிட்ச்‘ மாறுபட்டு இருந்தது. இன்றைய 3-வது 20 ஓவர் ஆட்டத்தில் சாஹலுக்கு பதிலாக அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஏனென்றால் சாஹல் 2-வது போட்டியில் ரன்களை வாரி கொடுத்து விட்டார். இன்றைய ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு எற்ற வகையில் இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

  தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் பெகருதீன் கூறியதாவது:-

  கடைசி 20 ஓவர் போட்டியிலும் நாங்கள் வென்று தொடரை வெல்வோம். குல்தீப் யாதவ் பந்து வீச்சை எங்களால் நம்பிக்கையுடன் ஆட முடியும். அவரது பந்து வீச்சில் நாங்கள் முதலில் திணறினோம். தற்போது எங்களால் அவரது பந்து வீச்சை சமாளிக்க இயலும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×