என் மலர்
செய்திகள்

ஒரே போட்டியில் 1045 ரன்கள் குவித்து மும்பை பள்ளி மாணவர் சாதனை
மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தனிஷ்க் கவாத் என்ற மாணவன் 1045 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளான்.
மும்பை:
மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களிடையே நவி மும்பை கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் யஷ்வந்த்ராவ் சவான் லெவன் அணி சார்பாக விளையாடிய தனிஷ்க் கவாத் என்ற சிறுவன் 515 பந்துகளில் 1045 ரன்கள் குவித்து சாதனைப்படைத்துள்ளான். இதில் 149 பவுண்டரியும், 67 சிக்சரும் அடங்கும். இரண்டு நாட்கள் களத்தில் நின்ற தனிஷ்க் இன்னிங்ஸ் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பந்தாரி கோப்பை போட்டியில் பிரணவ் தனவதே 1009 ரன்கள் எடுத்திருந்தார். அதை விட தன்ஷிக் அதிக ரன்கள் எடுத்திருந்தாலும் இந்த போட்டித் தொடருக்கு மும்பை கிரிக்கெட் அசோஷியேஷன் அங்கீகாரம் அளிக்காததால் தன்ஷிக்கின் சாதனையும் அங்கீகரிக்கப்பட வில்லை.
இந்திய அணியில் இடம்பெறும் பல பேட்ஸ்மேன்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தனிஷ்க் இடம்பெறுவார் என கருதப்படுகிறது.

Next Story