என் மலர்

  செய்திகள்

  பிரிஸ்பேன் டென்னிஸ்: நடால் விலகல்
  X

  பிரிஸ்பேன் டென்னிஸ்: நடால் விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவில் வருகிற 31-ம் தேதி தொடங்க உள்ள பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ரபேல் நடால் திடீரென விலகியுள்ளார்.
  சிட்னி:

  பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபேல் நடால் திடீரென விலகியுள்ளார்.

  டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்றில் கால் முட்டி காயம் காரணமாக பாதியில் வெளியேறிய நடால் இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

  ‘பிரிஸ்பேன் டென்னிசில் ஆடுவதற்கு ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால் இந்த போட்டிக்கு இன்னும் நான் தயாராகவில்லை. அதனால் இதில் விளையாட முடியாது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் நடால் கூறியுள்ளார். 

  அதே சமயம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவேன் என்று நடால் உறுதிப்பட கூறியிருக்கிறார்.

  Next Story
  ×