search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனை செய்தால் 90 சதவீத ஸ்பின்னர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்: ஐ.சி.சி. மீது அஜ்மல் கடும் தாக்கு
    X

    சோதனை செய்தால் 90 சதவீத ஸ்பின்னர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்: ஐ.சி.சி. மீது அஜ்மல் கடும் தாக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் ஐ.சி.சி. மீது கடுமையாக தாக்கியுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். 40 வயதாகும் இவர் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியின் கீழ் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். 2011-12-ல் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும்போது அஜ்மல் 3 போட்டியில் 24 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டியை தவிர 113 ஒருநாள் போட்டியில் 184 விக்கெட்டுக்களும், 64 டி20 கிரிக்கெட்டில் 85 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.



    சிறப்பாக பந்து வீசிய அஜ்மல் கிரிக்கெட் வாழ்க்கையில், பந்து வீச்சு முறையில் சந்தேகம் எழுந்ததால் புயல் வீச ஆரம்பித்தது. 2009-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு இவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஐ.சி.சி. அவருக்கு பந்து வீச தடைவிதித்தது. அப்போது ஒருநாள் கிரக்கெட் போட்டிக்கான தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். டெஸ்ட், டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல்ட10 இடத்திற்குள் இருந்தார். இந்த காலக்கட்டத்தில் அஜ்மல் வீழ்த்திய விக்கெட் அளவிற்கு எந்தவொரு வீரரும் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை.

    ஐ.சி.சி. விதிமுறைப்படி தனது முழங்கையை 15 டிகிரிக்கு மேல் வளைக்கக்கூடாது. ஆனால், அஜ்மலின் பிறவியிலேயே கை சற்று திரும்பியிருந்ததால் அவரால் ஐ.சி.சி. விதிமுறைக்குள் செயல்படமுடியவில்லை. இதனால் நம்பர் 1 இடத்தில் இருக்கும்போதே அவரது சர்வதேச ஆட்டம் முடிவுக்கு வந்தது.



    உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அஜ்மல் நேற்றோடு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் தனது பந்து வீச்சை குறைகூறிய ஐ.சி.சி. மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    பந்து வீச்சுக்கு தடைவிதித்த ஐ.சி.சி. விதிமுறை குறித்து அஜ்மல் கூறுகையில் ‘‘நான் மிகவும் கனத்த இதயத்தோடு ஓய்வு பெறுகிறேன். ஏனென்றால், முதலில் ஐ.சி.சி.யின் நெறிமுறை மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதுதான். இன்று விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களையும் சோதனைக்கு உட்படுத்தினால், 90 சதவீத வீரர்கள் தோல்வியடைவார்கள்’’ என்றார்.

    மேலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரையிறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் அஜ்மல் பந்தில் சச்சின் தெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ ஆனார். மைதான நடுவர் அவுட் கொடுத்ததும் சச்சின் தெண்டுல்கர் ரிவியூ கேட்டார்.

    ரிவியூ-வில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியில் சென்றதால் நடுவர் முடிவு திரும்பப்பெற பட்டது. இதனால் சச்சின் தெண்டுல்கர் அவுட்டாகாமல் 85 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.



    சச்சின் தெண்டுல்கருக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என அஜ்மல் கூறியுள்ளார்.

    சச்சின் விக்கெட் குறித்து கூறுகையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் ஸ்டம்பிற்கு நேராக எனது பந்தை காலில் வாங்கும்போது, அவுட் என நான் உறுதியாக நம்பினேன். ஆனால், நடுவர் ஏன் விக்கெட் கொடுக்கவில்லை என்பதை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தெண்டுல்கர் ரிவியூ கேட்கும்போது, அவர் அவுட்டாகத்தான் இருப்பார் என்பதில் நான் 110 சதவீதம் உறுதியாக இருந்தேன்’’ என்றார்.
    Next Story
    ×