என் மலர்

  செய்திகள்

  இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடையா?: டேரன் லீமான் விளக்கம்
  X

  இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடையா?: டேரன் லீமான் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒழுங்கீன சர்ச்சையை தவிர்க்க இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு டேரன் லீமான் பதிலளித்துள்ளார்.
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் அளித்த ஒரு பேட்டியில், ‘எங்களது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (70 டெஸ்டில் 274 விக்கெட்) அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு இப்போது 30 வயது ஆகிறது. இதே போன்று தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்படும் பட்சத்தில் 700 விக்கெட்டுகளை அவரால் வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

  ஒழுங்கீன சர்ச்சையை தவிர்க்க இங்கிலாந்து வீரர்கள் இரவு நேரத்தில் ஓட்டலை விட்டு வெளியே செல்வதற்கு அந்த அணி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே போன்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த லீமான், ‘நிச்சயமாக அது போன்று தடை விதிக்கமாட்டோம். எங்களது வீரர்கள் சரியான வழியில் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி அவர்கள் ஒன்றும் சிறுவர்கள் கிடையாது. நல்ல அனுபவசாலிகள்’ என்றார்.
  Next Story
  ×