என் மலர்

  செய்திகள்

  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜிம்பாப்வே 326 ரன்கள் குவிப்பு
  X

  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜிம்பாப்வே 326 ரன்கள் குவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புலவாயோவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்துள்ளது.
  ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று புலவாயோ குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் க்ரிமர் பேட்டிங் தேர்வு செய்தார்.

  அதன்படி மசகட்சா, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மிர் 4 ரன்னிலும், அடுத்து வந்த எர்வின் ரன்ஏதும் எடுக்காமலும், டெய்லர் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

  இதனால் ஜிம்பாப்வே 14 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு மசகட்சா உடன் மூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது மூர் 52 ரன்கள் எடுத்த நிலையில் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.

  அடுத்து மசகட்சா உடன் சிகந்தர் ரசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மசகட்சா சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார். ஜிம்பாப்வே அணி 61 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை பெய்தது. இதனால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. மசகட்சா 101 ரன்னுடனும், சிகந்தர் ரசா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மசகட்டா, சிகந்தர் ரசா ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 246 ரன்னாக இருக்கும்போது மசகட்சா 147 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

  சிகந்தர் ரசா நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் வாலர் டக் அவுட்டிலும், சகப்வா 10 ரன்னிலும் வெளியேறினர். சிகந்தர் ரசா 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த க்ரிமர் 11 ரன்னிலும், சிசோரா 9 ரன்னிலும் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே  109.1 ஓவரில் 326 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச் 3 விக்கெட்டும், கேப்ரியல், பிஷூ தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
  Next Story
  ×