என் மலர்

  செய்திகள்

  பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்
  X

  பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் ஜப்பான் வீரரை 21-14, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
  பாரிஸ்:

  பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கெண்டா 
  நிஷிமோட்டாவை எதிர்கொண்டார்.

  ஆட்டத்தின் முதலில் இருந்தே ஸ்ரீகாந்த் ஆக்ரோஷமாக விளையாடினார். ஜப்பான் வீரர் நிஷிமோட்டாவும் பதிலடி கொடுத்து வந்தார். இறுதியில் முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் கிதாம்பி ஸ்ரீகாந்த கைப்பற்றினார்.
   
  அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஸ்ரீகாந்த் மிகவும் அபாரமாக விளையாடினார். பல ஷாட்களை அசத்தலாக ஆடினார். ஸ்ரீகாந்தின் அற்புதமான ஷாட்களை ஜப்பான் வீரரால் எதிர்கொள்ள முடியவில்லை.
  21-13 என்ற் கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.

  இறுதியில், 21-14, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீரர் நிஷிமோட்டாவை வீழ்த்தி இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

  பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
  Next Story
  ×