search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வெற்றி கொண்டாட்டத்தில் பெனால்டி கோலை விட்டுக் கொடுத்த வீரர் - வைரலாகும் வீடியோ
    X

    வெற்றி கொண்டாட்டத்தில் பெனால்டி கோலை விட்டுக் கொடுத்த வீரர் - வைரலாகும் வீடியோ

    தாய்லாந்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் வெற்றி கொண்டாட்டத்தில் வலையை நோக்கி வந்த பந்தை தடுக்காமல் விட்ட கோல்கீப்பரால் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
    பாங்காக்:

    தாய்லாந்தில் உள்ளூர் U-18 கோப்பை போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான பாங்காக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சாத்ரி அங்தானாங் ஆகிய இரு அணிகள் மோதின.



    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சாத்ரி அணி முன்னிலையில் இருந்தது. பாங்காக் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை விட்டால் போட்டியை விட்டு பாங்காக் அணி வெளியேற வேண்டியது தான்.



    இந்நிலையில், பாங்காக் அணி வீரர் பெனால்டி பந்தை அடித்தார். ஆனால் பந்து வலையில் பட வில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த எதிர் அணி கோல்கீப்பர் வெற்றி கொண்டாட்டத்தில் மைதானத்தில் ஓடினார். அதற்குள் பந்தானது கீழே பட்டு மீண்டும் வலைக்குள் விழுந்தது. இதனால் பாங்காக் அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. அந்த அணி வெற்றி பெற்றது.

    தனது தவறினால் வெற்றி வாய்ப்பை இழந்த கோல்கீப்பர் முகம் வாடிப் போனது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
    Next Story
    ×